Wednesday 21 November 2007

மணமக்களை வாழ்த்த

மணமக்களை வாழ்த்த

بَارَكَ اللَّهُ لَكَ
பா(B)ர(க்)கல்லாஹு ல(க்)க

ஆதாரம்: புகாரி 5367, 5155, 6386

அல்லது

بَارَكَ اللَّهُ عَلَيْكَ
பா(B)ர(க்)கல்லாஹு அலை(க்)க

ஆதாரம்: புகாரி 6387

அல்லது

بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي الْخَيْرِ
பா(B)ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(B)ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(B)ன(க்)குமா பி(F)ல் கைர்

ஆதாரம்: திர்மிதீ 1011

அல்லது

بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
பா(B)ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(B)ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(B)ன(க்)குமா பீ(F) கைரின்

ஆதாரம்: அபூதாவூத் 1819

என்று மணமக்களை வாழ்த்தலாம்.

இஸ்லாத்தை ஏற்றவுடன் கூற வேண்டியது

இஸ்லாத்தை ஏற்றவுடன் கூற வேண்டியது

اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي
அல்லாஹும்மபி(F)ர் லீ, வர்ஹம்னீ வஹ்தினீ, வர்ஸுக்னீ

இதன் பொருள் :

இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! எனக்குச் செல்வத்தை வழங்குவாயாக!

ஆதாரம்: முஸ்லிம் 4863, 4864

கப்ருகளை ஸியாரத் செய்யும் போது

கப்ருகளை ஸியாரத் செய்யும் போது

السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ
அஸ்ஸலாமு அலை(க்)கும் தாரகவ்மின் மூமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹு பி(B)கும் லாஹி(க்)கூன்.

இதன் பொருள் :

இறை நம்பிக்கையுள்ள சமுதாயமே! உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே.

ஆதாரம்: முஸ்லிம் 367

அல்லது

السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَدًا مُؤَجَّلُونَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ
அஸ்ஸலாமு அலை(க்)கும் தார கவ்மின் மூமினீன் வஅதா(க்)கும் மா தூஅதூன கதன் முஅஜ்ஜலூன வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(B)கும் லாஹி(க்)கூன்.

ஆதாரம்: முஸ்லிம் 1618

அல்லது


السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ
அஸ்ஸலாமு அலா அஹ்த் தியாரி மினல் மூமினீன் வல் முஸ்மீன் வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல்முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(B)(க்)கும் லலாஹி(க்)கூன்.

இதன் பொருள் :

முஸ்லிம்களான மூமின்களான உங்கள் மீது சாந்தி நிலவட்டும். நம்மில் முந்திச் சென்றவர்களுக்கும், பிந்தி வருவோருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே.

ஆதாரம்: முஸ்லிம் 1619

அல்லது




السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلَاحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمْ الْعَافِيَةَ
அஸ்ஸலாமு அலை(க்)கும் அஹ்லத் தியாரி மினல் மூமினீன வல் முஸ்மீன வ இன்னா இன்ஷா அல்லாஹு லலாஹி(க்)கூன். அஸ்அலுல்லாஹ லனா வல(க்)குமுல் ஆபி(F)ய(த்)த

இதன் பொருள் :

முஸ்லிம்களான, மூமின்களான உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே. எங்களுக்கும் உங்களுக்கும் நல்லதை அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 1620

ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ

ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِ

அல்லாஹும்மபி(F)ர் லஹு வர்ஹம்ஹு வஆபி(F)ஹி வபு(F) அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பி(B)ல்மாயி வஸ்ஸல்ஜி வல்ப(B)ரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்ப(B)ல் அப்(B)யள மினத் தனஸி வ அப்(B)தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்ஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபி(B)ல் கப்(B)ரி

இதன் பொருள் :

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக!

ஆதாரம்: முஸ்லிம் 1600

இறந்தவருக்காகச் செய்யும் துஆ

இறந்தவருக்காகச் செய்யும் துஆ

இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவை செய்ய வேண்டும். ................ இட்ட இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

اللَّهُمَّ اغْفِرْ لِ ---- وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيهِ

அல்லாஹும்மக்பி(F)ர் ................... வர்ப(F)ஃ தரஜ(த்)தஹு பி(F)ல் மஹ்திய்யீன வஃக்லுப்(F) ஹு பீ(F) அகிபி(B)ஹி பி(F)ல் காபிரீன் வக்பி(F)ர் லனா வலஹு யாரப்ப(B)ல் ஆலமீன் வப்(F)ஸஹ் லஹு பீ(F) கப்(B)ரிஹி வநவ்விர் லஹு பீ(F)ஹி.

இதன் பொருள் :

இறைவா! ..................... மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

ஆதாரம்: முஸ்லிம் 1528