Tuesday 20 November 2007

காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ

காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ

காலையிலும், மாலையிலும் 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை மூன்று தடவை ஓதினால் அதுவே அனைத்துக் காரியங்களுக்காகவும் ஒருவருக்குப் போதுமானது என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: நஸயீ 5333

அந்த அத்தியாயங்கள் வருமாறு:

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ(1)اللَّهُ الصَّمَدُ(2)لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ(3)وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
பி(B)ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத். லம் யத், வலம் யூலத். வலம் யகுன் லஹு குபு(F)வன் அஹத்.

இதன் பொருள்:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

112 வது அத்தியாயம்
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ(1)مِنْ شَرِّ مَا خَلَقَ(2)وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ(3)وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ(4)وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
பி(B)ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல் அவூது பி(B) ரப்பி(B)ல் ப(F)லக். மின் ஷர்ரி மா ஃகலக். வமின் ஷர்ரி ஃகாஸி(க்)கின் இதா வ(க்)கப்(B). வமின் ஷர்ரின் னப்பா(F)ஸாத்தி பி(F)ல் உ(க்)கத். வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்.

இதன் பொருள்:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!

113 வது அத்தியாயம்

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ(1)مَلِكِ النَّاسِ(2)إِلَهِ النَّاسِ(3)مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ(4)الَّذِي يُوَسْوِسُ فِيصُدُورِ النَّاسِ(5)مِنْ الْجِنَّةِ وَالنَّاسِ
பி(B)ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்அவூது பி(B)ரப்பி(B)ன் னாஸ். ம(க்)கின் னாஸ். இலாஹின் னாஸ். மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ். அல்லதீ யுவஸ்விஸு பீ(F) ஸுதூரின் னாஸ். மினல் ஜின்னத்தி வன்னாஸ்.

இதன் பொருள்:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.

114வது அத்தியாயம்

No comments: